இன்று முதல் மின்சார தடை - இரண்டு வலயங்களாக நடைமுறைப்படுத்த தீர்மானம்

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரத் தடை தொடர்பில் இலங்கை மின்சாரசபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில்இரண்டு கட்டங்களாக மின்தடை ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை நான்கு வலயங்களாக பிரித்து தலா இரண்டு வலயங்களுக்கு ஒரே நேரத்தில் மின் தடை ஏற்படுத்தப்படும்.
இரவு 6 மணி தொடக்கம் 7 மணி வரையில் இரண்டு வலயங்களிலும் அதன் பின்னர் 7 மணி தொடக்கம் 8 மணி வரையில் மற்றைய இரண்டு வலயங்களிலும் மின் தடை ஏற்படுத்தப்படும்.
மின்சார விநியோக நடவடிக்கை இயல்புக்குத் திரும்பும் வரையில் நான்கு நாட்கள் தொடர்ந்தும் மேற்குறித்த நேர ஒழுங்கில் மின் தடை ஏற்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.