பிள்ளையானின் 45வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இரத்தானமுகாம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினத்தினை அவரது கட்சி ஆதரவாளர்களினால் கொண்டாடப்பட்டது.

இன்று காலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் காரியாலயத்தில் இரத்ததானமுகாம் ஒன்றும் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினால் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.

பிள்ளையானின் 45வது பிறந்த தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட இந்த இரத்தானமுகாமில் பெருமளவானோர் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆதரவாளர்களினால் அமைதியான முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.