களுவாஞ்குடியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரச்சார பணி! காணொளி இணைப்பு

மட்டக்களப்பு களுவாஞ்குடியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 11ம் கட்டமான தேர்தல் பிரச்சாரபணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இப்பிரச்சார பணியில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சரவணபவன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா,வடகிழக்கு வாலிபர் முன்னணி உறுப்பினர் சேயோன்,இலங்கைத் தமிழரசு கட்சி மகளீர் அணி தலைவி தேவமணி மற்றும் களுவாஞ்சிகுடி சில இளைஞர்களும் இணைந்து பிரச்சார பணியினை மேற்கொண்டனர்.