2001-2009வரை முழுநேர அரசியல் செய்தது தமிழீழ விடுதலைப்புலிகள்! பாஅரியநேத்திரன் காணொளி இணைப்பு

மட்டக்களப்பு - பிள்ளையாரடியில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் 12ம் கட்டமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நேற்றைய தினம்(24)  பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செங்கலடியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் அவர்களின் ஆதரவு வழங்கும் பரப்புரையில் கலந்துகொண்ட போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இவ்வாறு தெரித்தார்.

ஒவ்வொரு தலைவர்களும் அடுத்தகட்டத்தை கொண்டு செல்வதற்காக தந்தைசெல்வா வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுத்தார். தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழத்தை பெற முடியாவிட்டாலும் அதை பெறுவதற்கான ஒரு சக்தி இயங்கவேண்டுமென்பதில் 2001ம் ஆண்டு தீர் மானிக்கப்பட்டு ஜனநாயக ரீதியாக ஒரு முயற்சியை எடுத்ததன் விளைவாக தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும் கூட 2009மே 19 வரை முழு நேரமாக அப்போது அரசியல் செய்யவில்லை முழுநேர அரசியல் செய்தது தமிழீழ விடுதலைப்புலிகள் தான் வடகிழக்கில் இருக்கக்கூடிய 70% மான நிலப்பரப்பை தன்னகத்திலே வைத்துக்கொண்டு  அனைத்து கட்டமைப்புகளையும் வைத்துக்கொண்டு ஆட்சி செய்தார்கள்.

இராணுவ கட்டுப்பாடு ஒன்று இருந்தது விடுதலைப்புலிகள் கட்டுப்பாடு ஒன்று இருந்தது நீங்கள் படுவான்கரைக்கு வரும்போது அடையாள அட்டையை கொடுத்து பதிந்துவிட்டு வருவீர்கள்.