தமிழ்தேசிய அரசியலில் உரிமை முழுக்கமும் உணர்ச்சி எழுச்சியும் பிரித்துபார்க்கமுடியாதவை.ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரமை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் இன்று ஏறாவூர் ஐயங்கேணியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
யுத்த காலத்தினை விட மோசமான இடர்களையும் இன்னல்களையும் எம்மினம் எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்பதற்கான கட்டியம் கூறல்கள்தான் நிகழ்கால நிகழ்வுகளாக தெரிகின்றது.
அதுவும் கோத்தபாய அவர்கள் ஜனாதிபதியாகிய பின்னர் அவரது ஆட்சிசெல்லும்பாங்கு ஜனநாயக முகமூடியாக இராணுவ சார்பு சர்வாதிகாரமாகவே காணப்படுகின்றது.இதனை அடைவதற்காகவே அவர்களது மூன்றில் இரண்டு பெரும்பான்மை தாருங்கள் என்ற கோசம் அமைந்துள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாதபோதே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் நிலைமை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.அரசியலமைப்பு விதித்துள்ள தடைகளை அகற்றி அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தினை நிலைநாட்டுவதே அவர்களது குறிக்கோளாக இருக்கின்றது.
இந்த யதார்த்தம் அரசியலை புரிந்துகொள்ளாத எம்மவர்கள் சிலர் அபிவிருத்தி,அமைப்பு பதவி என்ற மாயையினை மக்கள் மத்தியில் முன்னிறுத்தி தமது சுயநல நோக்கினை அடைவதற்கு அப்பாவி மக்களை பலியாக்கப்பார்க்கின்றனர். அதற்காக சமூகவலைத்தளங்களை தமது போலி முகவரிகள் ஊடாக பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் தங்கள் சுயநலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள் என்பதை நாம்புரிந்துகொண்டதால் இந்த தேர்தலில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் அவர்கள் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளுக்கு வாய்பொத்தி கைகட்டி வாய்பொத்தி வேடிக்கைபார்ப்பவர்களாகவே இவர்கள் இருப்பார்கள்.
வடகிழக்கு சிங்கள பௌத்த பூமியென அண்மைக்காலமாக ஒலிக்கும் அரசின் மௌன கோசம் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஓங்கி உரத்து ஒலிக்கும்.அப்போது இவர்கள் என்ன செய்வார்கள்.இன்றைய உடனடி தேவை இவர்களது இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிமை அரசியல் உணர்வு அரசியல் செய்கின்றது என்று ஒப்பாரி வைக்கும் இவர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான் உரிமையினை வலியுறுத்தும்போது உணர்ச்சி எழுச்சிபெறத்தான் செய்யும்.பேரினவாதிகள் எம்மை அடக்கி எம்மண்ணை கபளீகரம் செய்து எம்மொழியை இரண்டாம் தரத்துக்கு பின்பே தமிழர் அரசியல் உரிமை,உணர்ச்சி என பிரவாகம் எடுத்தது.தமிழ்தேசிய அரசியலில் உரிமை முழுக்கமும் உணர்ச்சி எழுச்சியும் பிரித்துபார்க்கமுடியாதவை.ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது இவை இரண்டும்.
எனவே இன்றைய காலகட்டத்தில் அதுவும் கோத்தபாய அரசின் இராணுவ சர்வாதிகாரம்,எதெச்சதிகார ஆட்சி நகர்வினை தடுத்து நிறுத்தி அதற்கு கடிவாளம்போட்டு வேகத்தடையினை ஏற்படுத்தும் வல்லமையும் கடப்பாடும்,உணர்வும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு. அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு.அதையும் தமிழ் தேசிய உணர்வில் இயங்கியவர்களினால் மட்டுமே முடியும்.
இந்த யதார்த்ததை இன்று தமிழ் மக்கள் புரிந்துள்ளார்கள்.போலிகளை இனங்கண்டு புறந்தள்ளுவார்கள் என்ற நம்பிக்கை எனக்க இன்னும் உண்டு.ஏனெனில் எமதுதமிழ் இனம் தம் உயிரிலும் மேலாகவும் தம் உறவிலும் மேலாகவும் மண்ணையும் மொழியையும் நேசிப்பவர்களாகும் என்று தெரிவித்தார்.