பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் காணி உரிமை தொடர்பான கருத்தரங்கு

பின்  தங்கிய கிராமங்களில்  பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் காணி உரிமை தொடர்பான கருத்தரங்கு ஒன்று இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு பதுளை வீதி கித்துள் கிராமத்தில் இடம்பெற்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பிரஜா அபிலாசை வலையமைப்பின் ஊடாக குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் காணிகளை எவ்வாறு பாதுகாப்பது காணிக்கான ஒரு உரிமை பத்திரத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது, தங்களது காணிகளை எவ்வாறு பராமரித்து பாதுகாத்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கான விழிப்புணர்வு ஊட்டப்பட்து.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணி ஊடாக இன்று தெளிவுபடுத்தப்பட்டதுடன் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் காணி உரிமை தொடர்பான வேலைத் திட்டத்திற்கு அமைவாக பின்தங்கிய பிரதேசங்களில் தங்களது காணிகணிகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுத்து வருகின்றது.

பின்தங்கிய கிராமங்களுக்கான காணி பாதுகாப்பு தொடர்பாகவும் குறித்த கருத்தரங்கில்  பெண்கள் தலைமை தாங்கிய குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு புள்ளுமலை, கோப்பாவெளி, வெளிக்கா கண்டி உறுகாமம் கித்துல் சர்வோதய நகர் போன்ற கிராமங்களில் இருந்து பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் சட்டத்தரனி சதுர்த்திகா, சீ எச் ஆர் டி. பரசுராம் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மாவட்ட இணைப்பாளர் கலந்து கொண்டதுடன் சமூக இடைவெளியை பேணி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.