கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களில் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.தனஞ்செயன் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேய அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களின் கல்வி நடவடிக்களும் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 44 மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களிலும் கொரனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.