தும்புத்தடியை வைத்தால் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலைமை மாற்றப்படும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
கடந்த 32வருடத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் சார்பில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் பாராளுமன்றதில் உருவாகாத நிலையே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டு.ஊடக அமையகத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் அறிமுகமும் ஊடக சந்திப்பும் இன்று பகல் நடைபெற்றது.இதன்போது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
கிடைக்கம் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கவேண்டிய சூழ்நிலை தமிழ் மக்களுக்கு இன்று மிகவும் அவசியமானதாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார்.
90ஆயிரம் வாக்குகளைக்கொண்ட சகோதர இனம் மூன்று அமைச்சுக்களை கொண்டுள்ள நிலையில் மூன்று இலட்சம் வாக்குகளைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் அரசாங்கத்தில் பலத்தினைக்கொண்டிருக்காதது ஆதங்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆதங்கத்தினை தீர்க்கும் வகையிலேயே எனது சிரேஸ்ட விரிவுரையாளர் பதவியையும் தூக்கியெறிந்துவிட்டு அரசியலுக்குவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.