கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சுகாதார நடைமுறைகள் காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்த மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மிகுந்த வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக வழங்கிவைக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அக்குறானை உள்ள வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக மூன்றாம் கட்ட நிவாரணம் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்குறானை கிராமத்தில் வசித்து வரும் 75 குடும்பங்களுக்கான 1000 ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த நிவாரணம் வழங்குவதற்கான நிதி உதவிகளை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.
உதவி வழங்கும் நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் செ.நிலாந்தன் மற்றும் ஊடகவியலாளர்களான கு.சுபோஜன், ந.நித்தியானந்தன், கிராம சேவையாளர் சண்முகம் குரு,அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கிவைத்தனர்.
இதன்போது உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் நிதி உதவி வழங்கிய வல்வை 21 நண்பர்கள் அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.அத்துடன் மக்களுக்கான நிவாரண உதவிகளை தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் கிரான் பிரதேச செயலாளர் அவர்களின் செயற்பாடுகள் ஏனைய பிரதேச செயலகங்களுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது.