பெரியகல்லாறு அருள்மிகு கடலாட்சியம்மன் ஆலய பக்த்த அடியார்களினால் மட்டகளப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வயோதிவர் மடம் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் பண உதவி என்பன வழங்கி வைக்கபட்டது.

(புருசோத்)

நாட்டில் ஏற்பட்ட கொறோனா தோற்றின் அசாதாரன சூள்நிலை காரணமாக பாதிக்கபட்ட சிறுவர் இல்லங்கள் மற்றும் வயோதிவர் மடங்களுக்கு பெரிய கல்லாறு கடலாட்சியம்மன் ஆலய பக்த அடியார்கள் நேரில் சென்று பார்வை இட்டு கழ ஆய்வு மேற்கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கபட்டது.
  1. சிமிர்னா இல்லம் (களுவாஞ்சிக்குடி)
  2. நந்தவனம் முதியோர் இல்லம் ( களுவாஞ்சிக்குடி)
  3. சக்தி இல்லம் (களுவாஞ்சிக்குடி)
  4. விபுலானந்தா இல்லம் (பழுகாமம்)
  5. திலகவதியார் இல்லம் (பழகாமம்)
  6. முஸ்லிம் முதியோர் இல்லம் (காத்தான்குடி)
  7. வயோதிபர் இல்லம் (மட்டக்களப்பு)
  8. விபுலானந்தா முதியோர் இல்லம் (குருக்கள்மடம்)
  9. சம்பந்தர் குருகுலம் (களுதாவளை)
  10. கிறிஸ்தா இல்லம் (கல்முனை)
  11. மெதடிஸ்த சிறுமியர் இல்லம் (கல்முனை)
  12. கேமன் பெண்கள் இல்லம் (பெரியநீலாவணை)
ஆகிய இல்லங்களுக்கு ரூபா 335634/= பெறுமதியான உலர் உணவு பொருட்களும் 77000/= ரூபா பணத்ததையும் பிரித்து வழங்கி வைக்கபட்டிருந்து என்பதும் குறிப்பிடதக்க விடயமாகும்  இவர்களுடய சேவை மேன்மேலும் வழர நாங்களும் வாழ்துகின்றோம்.