மட்டக்களப்பில் மதுவரித்திணைக்களத்தினால் தொடரும் கசிப்பு வேட்டை

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் கசிப்பு உற்பத்தி நிலையம் மற்றும் கசிப்பு விற்பனை நிலையம் என்பன மதுவரித்திணைக்களத்தினால் இன்று காலை முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுத்துவரும் நிலையில் அதனை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படும் நடவடிக்கைகளை மதுவரித்திணைக்களம் முன்னெடுத்துவருகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்கரச்சி என்னும் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10,000 மில்லி லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் அது தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேபோன் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.அங்கிருந்து கசிப்பு காய்ச்சுவதற்கு தயார் நிலையில்இரண்டு பரல்களில் இருந்த சுமார் 2,50,000மில்லி லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டதுடன் அது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள உதவி மதுவரித்திணைக்கள ஆணையாளர் கே.தர்மசீலனின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் சென்ற மதுவரித்திணைக்களக பரிசோதகர் என். சிறிகாந்தா, மதுவரித்திணைக்கள பரிசோதகர் ஏ.ஆனந்தநாயகம் மற்றும் கலால் உத்தியோகத்தர்களான ஜனானந்தா, சேவையர், அனுஷாந், சிவகாந்தா, ரஜனிகாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஐந்து பேருக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.