கொரனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுவந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில் இன்று காலை மதுபானசாலைகளும் திறக்கப்பட்டு மதுப்பிரியர்களின் தீராத ஆசை நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகள் திறக்கப்பட்டதன் காரணமாக மதுபான போத்தல்களை கொள்வனவுசெய்வதில் குடிமக்கள் தீவிர பிரயத்தனங்களை முன்னெடுத்துவருவதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு களுவாஞ்;சிகுடியில் உள்ள மதுபானசாலைகள் இன்று முற்பகல் திறக்கப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான குடிமக்கள் ஒன்றுதிரண்டதன் காரணமாக அங்கு சமூக இடைவெளி பேணப்படாமையினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
குறித்த மதுபானசாலைகளுக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மதுப்பிரியர்கள் மதுபான போத்தல்களை கொள்வனவுசெய்ய முண்டியடித்ததன் காரணமாக நெருக்கடிகள் ஏற்பட்டது.
எனினும் சில பகுதிகளில் சமூக இடைவெளியை பேணிய வகையில் முகக்கவசங்களை அணிந்த நிலையில் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை கொள்வனவுசெய்தனர்.
சில பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் இருந்து பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணும் வகையிலான அறிவுறுத்தல்களை வழங்கினர்.