தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் சுமந்திரனும் சம்பந்தனும் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் விமர்சனங்களை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் முடியுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துவெளியேறட்டும் அவ்வாறு இல்லாவிட்டால் சுமந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றிக்காட்டட்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார்.
இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப்புலிகளை மையமாகவைத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதை சம்பந்தன் ஐயா அவர்கள் தொடர்ச்சியாக மறுதலித்துவருகின்றார்.2009ஆம் ஆண்டு போராட்டம் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் அவர் தொடர்ச்சியாக இந்த கருத்தினை தெரிவித்துவருகின்றார்.
விடுதலைப்புலிகள்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கினார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஒரு பகுதியினர் கூறுகின்றனர் விடுதலைப்புலிகளினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சொல்கின்றார் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்படவில்லையென்று.இவர்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதை காணமுடிகின்றது.தற்போது எந்தவித போராட்டங்களும் இல்லாதநிலையில் தாங்கள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றவகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
ஒரு கட்சியின் ஊடக செயலாளராக இருப்பவரே கட்சியின் முழுமையான கருத்தினையும் வெளிப்படுத்துபவர் அவர்தான்.கட்சியின் ஊடக செயலாளர் விடுக்கும் கருத்துகள் கட்சியின் கருத்தாகவே கொள்ளப்படவேண்டும்.இது முதல் தடவையில்லை.சுமந்திரன் விடுதலைப்புலிகளை தவறுதலாக பேசும் காலத்தில் அது கட்சியின் கருத்தல் சுமந்திரனின் கருத்து என கூறி மழுப்பிவந்தனர்.அப்படிப்பட்ட ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இதுவரையில் என்ன ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஏன் ஓழுக்காற்று நடவடிக்கையெடுக்கவில்லை.அவ்வாறானால் அவரின் கருத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதாகவே கருதவேண்டியுள்ளது.
பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தினை சுமந்திரன் கொச்சைப்படுத்தியே வந்துள்ளார்.அந்த விடயத்தில் அவர் தனது நிலைப்பாட்டினை தெளிவாகவே தெரிவித்துவருகின்றார்.சிங்கள மக்கள் மத்தியில் தன்னை நல்லவராக காட்டமட்டுமன்றி சிங்கள கட்சிகள் மத்தியிலும் விடுதலைப்புலிகளை விமர்சித்து தன்னை நல்லவராகவும் காட்ட முனைந்துவருகின்றார்.
விடுதலைப்புலிகளின்போராட்டம் தொடர்பில் சிங்கள சிவில் அமைப்புகளும் சில சிங்கள கட்சிகளும் சில சிங்கள அமைச்சர்களும் நல்ல கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில் ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் போட்ட பிச்சையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் வந்தவர்கள் அதனை விமர்சனம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
சுமந்திரனின் வழிகாட்டியாக ரணில் இருப்பதன் காரணமாகவே அவர் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்தினையும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்தினையும் தெரிவித்துவருவதாகவும் வியாழேந்திரன் இதன்போது தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது சுமந்திரனால் வழிநடாத்தப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பங்காளிகட்சியெனவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.