மட்டக்களப்பு ரயில்நிலைய சந்தியில் மோதிவிட்டு சென்ற வாகனம் -பொலிஸார் வலைவீச்சு

மட்டக்களப்பு நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய (ரயில்நிலைய)சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற ஒருவரை வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் குறித்த நபரை மோதிய வாகனம் அடையாளம் காணப்படவில்லையெனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பார்வீதியின் குறுக்கு வீதியான திருக்குறிப்புதொண்;டர் வீதியை சேர்ந்த 45வயதுடைய த.அமுதன் என்பவரே படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.