போரதீவுப்பற்றில் வறட்சியான பகுதிகளுக்கு பிரதேசசபை நீர் விநியோகம்

(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டுள்ள நிலையில் சில பகுதிகளில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேசசெயலகமானது 180 சதுரகிலோ மீற்றரை கொன்ட பகுதியாகும் இப் பகுயில் 46860 சனத் தொகை உள்ளனர்.  43கிராம உத்தியோகஸ்தர் பிரிவு கானப்படுகின்றனர் .

நாட்டில் ஏற்படுகின் கொரோனா நோய் தாக்கம் ஒரு பகுதியில் வரட்சி ஒரு பக்கம் கானப்படுவதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போரதீவுப்பற்று பிரதேசம் வருடா வருடம் வறட்சியினால் பாதிக்கப் படுகின்ற பிரதேசமாகும் இப் பகுதியில் அதிகமான மக்கள் வாழும் பகுதியில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோ நோயித்  தாக்கத்தையும் பொருட்படுத்தாமலும் பிரதேசத்தில் ஏற்படுகின்ற வரட்சியினை கருத்திக் கொன்டு போரதீவுப் பற்று தவிசாளரின் வேன்டுதலுக்கு அமைவாகபோரதீவுப் பற்று பிரதேசசபையினால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்  லீற்றர் குடி நீர் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

களுமுந்தன்வெளி. இளைஞர்விவசாயத்திட்டம். திக்கோடை. தும்பங்கேனி. பழுகாமம்,40ம் கிராமம், காந்திபுரம், புன்னக்குளம், பிலாலிவேம்பு, பொறுகாமம்,பிலீஆறு,ஒல்லிமடு,கண்ணபுரம்,நெல்லிக்காடு,வேத்திச்சேனை, செல்வாபுரம், சின்னகாந்திபுரம்,37ம் கிராமம் ஆகிய கிராமங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுவருகின்றது.

பிரதேசசபை செயலாளர் உத்தியோகஸ்தர்கள் பங்களிப்பின் மூலம் பிரதேசசபையின் குறித்த பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.