நீண்ட நாட்களுக்கு பின்னர் மட்டக்களப்பில் மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சிக்கு பின்னர் இன்று கடும் மழைபெய்துவருகின்றது.

கொரனா அச்சுறுத்தல் மத்தியிலும் நீண்டகாலமாக மழையில்லாத காரணத்தினால் பல்வேறு தரப்பினரும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.

குறிப்பாக விவசாயிகள்,வீட்டு தோட்ட செய்கையாளர்கள் கடும் பாதிப்புகள் எதிர்கொண்டனர்.

அத்துடன் கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் பிற்பகலுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.

இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன் விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.