மட்டக்களப்பு முகத்துவாரத்தில் கவிழ்ந்த மீன்பிடி படகு –தெய்வாதீனமாக உயிர்தப்பிய மீனவர்கள்

மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்தநிலையில் அதில் இருந்த மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளர்.

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் இன்று காலை முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பாரிய கடல் அலையில் சிக்கி மீன்பிடி படகு கவிழ்ந்துள்ள நிலையில் மூன்று மீனவர்களும் கடலில் வீழ்ந்துள்ளனர்.

கவிழ்ந்த படகினை பிடித்துக்கொண்டு மீனவர்கள் சத்தமிட்டதை தொடர்ந்து அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஏனைய மீனவர்கள் அப்பகுதிக்கு விரைந்துவந்து மீனவர்களை காப்பாற்றியுள்ளனர்.

மீனவர்கள் விரைந்துவந்து உதவியதன் காரணமாக கடலில் மூழ்கிய மூன்று மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன் கடலில் மூழ்கிய பகுடகும் மீனவர்களின் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த படகு மற்றும் படகின் இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன் வலைகள் சேதமடைந்துள்ளதாகவும் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

கடலில் சீரற்ற காலநிலை காணப்படும் நிலையிலும் தமது வறுமை நிலை காரணமாக கடலுக்கு சென்று மீன்பிடிக்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.