மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் “ பாதுகாப்பான தேசம் – செழிப்பான நாடு” எனும் தொனிப்பொருளிலான  எழுபத்திரண்டாவது சுதந்திர தின நிகழ்வுகளானது பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இதன் முதல் நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. இதன் போது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பிரதேச செயலாளரினால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டது.

அடுத்த நிகழ்வாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை விழா மற்றும் சிரமதான நிகழ்வானது களுதாவளை 04 ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர் , கிராம மாதர் அபிவிருத்தி சங்கம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து களுதாவளை சாந்திபுரம் பாலர் பாடசாலையிலும் பாடசாலை சிறார்களால் மரநடுகை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.