வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு!!



வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியில் உள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதிக அளவு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கோப்பாவெளி  கிராமங்களின் கல்வி நடவடிக்கைக்கு  ஊந்து சக்தியாக மாணவர்கள மத்தியில் உள்ள வறுமை நிலையை கருத்தில் கொண்டு மாணவர்கள் நலன் கருதி குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த கிராமங்களில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் பலவிதமான செயற் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கும் சக அமைப்புகளின் உதவி பெற்று செயற்பட்டு வருகின்றது

அந்த வகையில் மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ளது கித்துள் , சர்வோதயநகர் உறுகாமம்  கோப்பாவெளி வெளிக்கா கண்டி,புல்லுமலை போன்ற கிராமங்களை சேர்ந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர் கழகங்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுள்ளது .

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் அதன் தலைவர் இரா .சாணக்கியன் இந்த பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வுக்கு இராசமாணிக்கம் அமைப்பின் தலைவர் இரா . சாணக்கியன் ,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் மாவட்ட செயற்பாட்டாளர் மாணவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது