தேற்றாத்தீவு மாங்காடு பிரதான வீதிகளுக்கு மின்விளக்குகள் பிரதேச சபை உறுப்பினர் தேவரஞ்சனின் ஒதுக்கீட்டில்



மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட  தேற்றாத்தீவு மாங்காடு  வட்டாரத்தின் பிரதான வீதிகளுக்கு பிரதேச சபை உறுப்பினர் தேவரஞ்சனின் பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டில் வீதிவிளக்குகள் பொருத்தப்பட்டன. 

 இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் திருமதி ரஞ்சனி மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தேவரஞ்சன் ஆகியோர் இதன் போது பிரசன்னம்மாகி இருந்தனர்.