உதவும் கரங்கள் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு –உதவும் உள்ளங்களின் சங்கம்

தாய்தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் மயிலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தில் இன்று புத்தாண்டினை வரவேற்கும் நிகழ்வும் சிறுவர்களுக்கான புதிய ஆடைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தாய்தந்தையரை இழந்த மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.

இந்த இல்லத்தில் 75 மாணவர்கள் கற்பதுடன் அவர்களுக்கான உணவு,உடை,கற்பித்தல் செயற்பாடுகளை இல்லமே முன்னெடுத்துவருகின்றது.இந்த இல்லத்தின் புத்தாண்டு விழா இன்று உதவும் கரங்கள் இல்லத்தின் தலைவர் சதாசிவம் ஜெயராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி உமா விவேகானந்தன்,ஆசிரிய வான்மை விருத்தி நிலைய முகாமையாளர் மு.சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அண்மையில் வெளியான உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட ரமேஸ் திவாகரன்,விழிப்புலனற்ற தம்பதிகளின் பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்ட இரட்டை சகோதரர்கள் ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்கு புதுவருடத்திற்கான புதிய ஆடைகள் வழங்கப்பட்டதுடன் கற்றல் உபகரணங்கள்,பாடசாலை பைகள்,கைவிசேடங்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.இதேபோன்று இல்ல உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக:கு கைவிசேடங்களும் வழங்கிவைக்கப்பட்டன.