கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் சிரமதானம்.


(சசி துறையூர் )
கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனமும் ஏறாவூர் பற்று, ஏறாவூர்  நகர் இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு 03.01.2020 இன்று காலை ஏறாவூரில் அமையபெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ம.பிரியங்கன்  தலைமையில் நடைபெற்றது.

இச் சிரமதான நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் A.ஹமீர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண காரியாலய  உதவிப் பணிப்பாளர்   MLMN.நைரூஸ் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற  மட்டக்களப்பு மாவட்ட  மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜேசுதாஸன் கலாராணி ,
ஏறாவூர் நகர் இளைஞர் சேவை உத்தியோகத்தர் Aw.இர்ஷாத் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும்  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின்  சம்மேளன பிரதிநிதிகள் ,  இளைஞர் கழகங்களின் அங்கத்தவர்கள் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலைய உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் என பலரும் பங்கேற்றனர்.புற்று நோயினால் பாதிக்கப்பட்டு  பிந்திய நிலையை அடைந்து(late stage) தங்களது வீடுகளில் வைத்துப் பராமரிக்க முடியாத  நோயாளர்களுக்கும், புற்று நோயின் ஆரம்ப நிலையில் சிகிச்சை  பெற்றுவரும் தூர  பிரதேச நோயாளர்கள் தற்காலிகமாக தங்கி தமது சிகிச்சைக்குரிய நேரத்தில் சென்று தமக்குரிய சிகிச்சையை   பெற்றுக் கொள்வதற்குமான வசதிகள் சேவைகளை
மட்டக்களப்பு  ஏறாவூர் பிரதேசத்தில் அமைந்துள்ள #EASCCA #HOSPICE  எனும் புற்றுநோயாளர்  பராமரிப்பு நிலையம்  இன மத மொழி பேதங்களுக்கப்பால் சேவை வழங்கி  வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


இங்கு அனுமதிக்கப்படும் எந்த நோயாளரிடமும் எவ்வித கட்டணங்களும் அறவிடப்படது முற்று முழுதாக இலவப் பராமரிப்பும் நடைபெறுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.