கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பு

“2020 மகிழ்ச்சிகரமான ஆரம்பம்”தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று காலை தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய அதிபர் த.அருமைத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய சேவைக்கால ஆலோசகர் திருமதி எஸ்.பூபாலசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தாமரைக்கேணி கிராம சேவையாளர் திருமதி கோவர்த்தனி நக்கீரன் உட்பட மதத்தலைவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இரண்டாம் தர மாணவர்களினால் முதலாம் தர மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பத்திற்கு மேற்கொள்ளவேண்டியn சயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.