மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மட்டக்களப்பில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற தைப்பொங்கல்

(புருசோத்;)
தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்களில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் தேவாலயத்தில் இன்று காலை பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் பெரியகல்லாறு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் இந்த பொங்கல் விழா நடாத்தப்பட்டது.
பெரியகல்லாறு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ஜெஸ்ரின் ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புனித அருளானந்தர் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜெஸ்ரின் வின்சன்ட் மற்றும் அருட்தந்தை ஆகியோரின் தைப்பொங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தமிழர்களின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் மதவேறுபாடுகளுக்கு அப்பால் பெருமளவான பொதுமக்களும் இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.