முனைப்பு நிறுவனத்தால் எட்டு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் , மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைப்பு.




மட்டக்களப்பில் முனைப்பு  ஸ்ரீ லங்கா  நிறுவனத்தினால்  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் சிலவற்றுக்கு வாழ்வாதார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான உதவிகள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது,
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில்  மட்டக்களப்பு தாண்டவன்வௌி தேவாலய மண்டபத்தில்   மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பாடசாலை கற்றலுக்கு  தூர இடங்களுக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தெரிவு செய்யப்பட்ட நான்கு  மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், குறைந்த வருமானம் பெறும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் பெண் தலைமைதாங்கும் எட்டு (8) குடும்பங்களுக்கு தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சுயதொழில் உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மாணிக்கப்போடி குமாரசாமி, உறுப்பினர் சந்திரகுமார், முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின்  செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேற்படி செயல்  திட்டத்துக்கான நிதியினை முனைப்பின் கடந்த கதம்பமாலை நிகழ்விற்கு சமுகமளித்த உறவுகளால் முனைப்பின் இலங்கைக்கிளைத்தலைவர் மா.சசிகுமாரிடம்சுவிஸ் உள்ளங்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் கடந்த வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்காகவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் ஏனைய சமூக சேவைகளை புலம் பெயர்ந்து வாழும் உறவுகளின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில்  தொடர்ச்சியாக வழங்கிவருகின்றமை குறிப்பபிடத்தக்கது