மார்கழி மாதம் ஜேசு கிறிஸ்துவின் பிறப்பினை கொண்டாடும் மாதமாக கிறிஸ்தவ மக்களினால் சிறப்பிக்கப்பட்டுவருகின்றது.
ஜேசு கிறிஸ்துவின் பிறப்பினை சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் கொண்டாட்டங்கள் களைகட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு இருதயபுரம் புனித இருதயநாதர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பனி மனித பொம்மை இன்று மாலை திறந்துவைக்கப்பட்டன.
கிறிஸ்து பிறப்பு மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் இருதயபுரம் கிறிஸ்தவ வாலிப ஒன்றியத்தினால் சிறப்பான முறையில் முப்பது அடி உயரத்தில் இந்த பனி மனித பொம்மை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை ஒளியூட்டி திறக்கும் நிகழ்வு இன்று மாலை ஆலயத்தின் பங்குத்தந்தை பேதுரு ஜீவராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பனித மனித பொம்மை ஆசிர்வதிக்கப்பட்டு ஒளியூட்டி அருட்தந்தையினால் திறந்துவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் தாத்தா வருகைதந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.