சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் இன்று காலை சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகைதந்ததை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை பரீட்சைகள் நடைபெற்றன.

பட்டிருப்பு,மட்டக்களப்பு,கல்குடா,மட்டக்களப்பு மேற்கு,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயங்களில் இன்று கா.பொ.சதாரணதர பரீட்சைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையிலும் மாணவர்கள் பரீட்சைக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.