மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள மாங்காடு கிராமத்தில் மூலிகை தோட்டம் அமைக்கும் நிகழ்வு மாங்காடு கிராம சேவகர் த.யனேந்திரன் தலைமையில் இன்று(02.12.219) திங்கட்கிழமை இடம் பெற்றது மாங்காடு பாலர் பாடசாலை வீதியில் அமைந்துள்ள கிராமசேவகர் அலுவலக வளாகத்தில் இடம் பெற்றது .
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் முதல் முதலாக மூலிகை தோட்டம் அமைக்க நிகழ்வானது இடம் பெற்றமை குறிப்பிடதக்கவிடயம் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் கலந்து கொண்டார். இதன்போது 108 வகையான மூலிகைகள் நாட்டப்பட்டமை சிறப்பு அம்சமாகும் மாங்காடு கிராமம் மக்களினால் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் உதவிப் பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன் மாங்காடு கிராமசேவகர் த.யனேந்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினத்திற்கு "செயல் அரசி" என்னும் பட்டமும் வழங்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்