மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

உப்போடை லூர்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை

ஜேசு கிறிஸ்துவின் பிறப்பினை கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் தேவாலயங்களில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு சின்ன உப்போடை புனித லூர்து மாதா தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள ஜேசு சபை துறிவ அருட்தந்தை பூண்டி ராஜன் தலைமையில் இதன்போது கிறிஸ்மஸ் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஜேசு சபை துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம் உட்பட அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் இந்த திருப்பலியில பங்குகொண்டிருந்தனர்.

இதன்போது இந்த நாட்டில் நீடித்த சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் என வேண்டி சிறப்பு பூஜையும் நடாத்தப்பட்டது.

இந்த கிறிஸ்மஸ் தின திருப்பலி பூஜையின்போது கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் மக்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
இந்த திருப்பலி பூஜையில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.