வந்தாறுமூலையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!


மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வந்தாறுமூலை கிராமத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கபட்டன. இந்த நிகழ்வின் போது சுமார் 250 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வந்தாறுமூலை இளையோர் அமைப்பினரின்  ஏற்பாட்டில் இளையோர் அமைப்பின் தலைவர் மகேந்திரன் ஐங்கரன் தலைமையில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ் மொழி  வாழ்த்துக்களோடும், ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து வரவேற்புரை, ஆசியுரை, தலைமையுரை, அதிதிகள் உரை, பொருளாளரினால் இச்செயற்றிட்டத்திற்கான வரவு செலவு அறிக்கை வாசித்தல், தொடர்ந்து கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு செயலாளரின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுபெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்டத்தின் அபிவிருத்தி குழுத்தலைவருமான S.வியாழேந்திரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு நீர்முகப்பிள்ளையார் ஆலய பிரதம குரு வணக்கத்துக்குரிய சிவ ஸ்ரீ மாணிக்கம் ஜெயம்பலம் குருக்கள் அவர்களும் மற்றும் வந்தாறுமூலையினைச் சேர்ந்த ஏறாவூர்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களும் வந்தாறுமூலையைச் சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயக்கிருஷ்ணா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் S.வியாழேந்திரன் அவர்கள் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய பரிசளிப்பு நிகழ்வினை திறண்பட ஒழுங்கு செய்த வந்தாறுமூலை இளையோர் அமைப்பிற்கு தான் விசேட நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் அன்மைக்காலமாக வந்தாறுமூலை இளையோர் அமைப்பின் சமூகப் பணிகள் வரவேற்கத்தக்க விதத்தில் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் இளைஞர்கள் இவர்கள் போன்று சமூகப்பணிகளை ஆற்றுவதில் ஆர்வம் எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு முன்மாதிரியான இளைஞர்களின் பங்களிப்பினாலே எமது சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.

வந்தாறுமூலை கிராமமானது பல புத்திஜீவிகளை உருவாக்கிய, உருவாக்கிக் கொண்டு இருக்கின்ற கிராமம் எனவும் அதன் ஒரு  வெளிப்பாடே இங்கு காணப்படுகின்ற வைத்தியர்களான வைத்தியர் சிறிநாத் அவர்களும் ஜெயக்கிருஷ்ணா அவர்களும் காணப்படுவதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இவர்கள் போன்று இன்று கற்றல் உபகரணங்களை பெற்றுச் செல்கின்ற மாணவர்கள் உருவாக வேண்டும் எனவும் மாணவர்கள் கல்வி தொடர்பாகவும், மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கையிலும் பெற்றோர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தன்னால் முடிந்த அளவு வந்தாறுமூலை கிராமத்திற்கு கடந்த காலங்களில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் எதிர்காலத்தில் வந்தாறுமூலை இளையோர் அமைப்பிற்கு ஊடாக வந்தாறுமூலை பிரதேசத்தின் நன்மை கருதி பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

வந்தாறுமூலை சமூக அமைப்புக்கள் போன்று இன்னும் பல கிராமங்களில் இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்புக்கள் காணப்படுவதாகவும் அத்தகைய செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை எனவும்  ஒரு கிராமத்தின் வளர்ச்சிப் பாதைக்கு அந்த கிராமம் சார்ந்த இளைஞர்களினதும், புத்திஜீவிகளினதும் பங்களிப்பு காத்திரபூர்வமானது எனவும் அதனை இன்று வந்தாறுமூலைப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவது பாராட்டத்தக்க ஒரு செயல் எனவும் இன் நிகழ்வுக்காக அற்பணிப்புடன் செயற்பட்ட வந்தாறுமூலை இளையோர் அமைப்பின் அத்தனை உறுப்பினர்களுக்கும், இன்றைய தினம் கற்றல் உபகரணங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் ஏனைய அதிதிதிகளுக்கும் பெற்றார்களுக்கும் இதற்காக நிதிப் பங்களிப்பினை வழங்கிய சமூக அக்கறையாளர்களுக்கும் தனது விசேடமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இறுதியாக இன்றைய நிகழ்வானது இளையோர் அமைப்பின் தலைவர் இன்று வருகை தந்த அதிதிகள்  அனைவரையும், எமது உதவித்திட்டத்திற்காக நிதியினை வழங்கிய வந்தாறுமூலையைச் சேர்ந்த நன்கொடையாளர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்த அவர் எதிர்காலத்தில் இவ்வாறு பல சமூகப் பபணிகளுக்காக வந்தாறுமூலை இளையோர் அமைப்பு பல வழிகளும் திரிவுபடுத்தப்பட்டு சமூகம் சார்ந்த விழிப்புர்வுடன் எதிர்காலத்தில் வலம்வரும் எனவும் தெரிவித்தார்.