மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களினை கருத்தில் கொண்டு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

சீரற்ற காலநிலை காலமாக கூலித்தொழில் செய்பவர்களும் அன்றாட சம்பளத்திற்கு வேலைசெய்பவர்களும் கடந்த ஒரு மாதகாலமாக தொழில் இழந்த நிலையில் மிகவும் கஸ்ட நிலையினை எதிர்கொண்டுவருகின்றனர்.

அவர்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வறிய நிலையில் உள்ள சுமார் 200 மாணவர்களுக்கு இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு ஊறணி,திருப்பெருந்துறை,கறுவப்பங்கேணி ஆகிய பகுதியில் உள்ள வறிய மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கறுவப்பங்கேணி மாதர் அபிவிருத்தி சங்கம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் சுமார் 75 மாணவர்களுக்கு இன்று மாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதேபோன்று ஊறணி மற்றும் திருப்பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வறிய நிலையில் உள்ள சுமார் 125 மாணவர்களுக்கு இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.