தமிழ் மக்களின் உரிமை மீறல்களையும் சர்வதேசம் வரை கொண்டு சென்றவர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் - தீபாகரன்

மட்டக்களப்பில் 90ம் ஆண்டு இடம் பெற்ற  பல தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும் அன் மனித உரிமை மீறல்களையும் சர்வதேத்திற்கு கொண்டு சென்ற ஒரே ஒரு தலைவர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தான் என மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனியின் தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 14 வது ஆண்டு நினைவுதினம் (25) இன்று மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமையுரையினை ஆற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர்இ

 2005 காலப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சுதந்திரமாக நடமுடியாத கெடுபிடியான காலமாக இருந்தது. மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுக்கு கூட பலர் அச்சத்தில் செல்வவில்லை இவர் கொலை செய்யப்பட்டு மறுதினம் அப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அமரர் தங்கேஷ்வரி கனகசபை அரியநேத்திரன் ஜெயானந்தமூர்த்தி ஆகியோருக்கு எச்சரிக்கை தொலைபேசி அழைப்புக்களும்இ எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்களும் மட்டக்களப்பு நகரில் போடப்பட்ட சம்மவத்தையும் நாம் கேள்விப்பட்டோம்                

எம்மைப்போன்ற பல இளம் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இவர் வாழ்ந்ததுடன் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக செயலாற்றி எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும்  முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர்.

இவர் படுகொலை செய்யப்பட்ட பின் தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய அன்னாருக்கு விடுதலைப் புலிகளின் தலைவரால் மாமனிதர் விருது வழங்கப்பட்டது நாம் இங்கு சுட்டிகாட்ட வேண்டிய விடயம்.

ஆரம்பத்தில் ஆங்கில ஆசிரியராக தமது சமுக பணியை ஆரம்பித்த இவர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர் தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே என்பதுடன் பல மொழியறிவில் தேர்ச்சி பெற்றவர் இவர் என்பதில் ஐயமில்லை

மட்டக்களப்பில் 90ம் ஆண்டு இடம் பெற்ற  பல தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும் அன் மனித உரிமை மீறல்களையும் சர்வதேத்திற்கு கொண்டு சென்ற மட்டக்களப்பன் ஒரே ஒரு தலைவர் இவர் ஆகும் இது இவரின் சாணக்கிய அரசியலையும் மொழி பாண்டித்தியத்தையும் காட்டுகின்றது

குறிப்பாக படுவான்கரை பெருநிலத்தில் கடந்த 1991 யூண் 12ம் திகதி மகிழடித்தீவில் இடம்பெற்ற படுகொலையை சர்வதேச ரீதியாக வெளிக்காடலடியது மட்டுமன்றி அதற்கான ஒரு ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கத்தால் அமைப்பதற்கு அழுத்தம் கொடுத்தவரும் இவர்தான்.

இவ்வாறான மறைந்த தலைவர்களின் வரலாறுகள் தியாகங்கள் இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எமது கட்சி மாத்திரம் தான் கட்சி வளர்ச்சிக்கும் மக்கள் சேவைக்காகவும் பணம் தியாகங்களுக்கு அப்பால் உயிரையும் தியாகம் செய்கின்றனர்.

இவ்வாறான ஒரு மாமனிதரை இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியால் கடந்த 2012இம் ஆண்டு தொடக்கம் இதே நத்தார் நாளில் நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.

எமது அரசியல் இருப்புக்காக நிரந்தர அரசியல் தீர்வுக்காக உயிர் நீத்தவர்களை நாம் நினைவுகூருவதற்கு கடமைப்பட்டுள்ளோம் அவரை போன்று எம் மண் விடியலுக்காக உயிர்நீத்த அனைவரையும் நாம் நினைவுகூரும்போது அவர்களின் தியாத்தின் பதிவுகள் எமது இளைய சந்ததிகளுக்கு வரலாற்றை மீட்பதற்கு ஒரு வாய்பாக அமையும்.

இன்றய மாமனிதர் ஜோசப்ஐயா அவர்கள் உயிர் நீத்த 14வது ஆண்டு நினைவுநாளில் அவருக்கக அஞ்சலி வணக்கம் செலுத்தும் நாம் அவர் விட்டுச்சென்ற உறுதி உண்மை உணர்வு தியாகம் என்பவற்றை நாமும் அவர் போன்று கடைப்பிடித்து மேற்கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்இ சீ.யோகேஸ்வரன் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்இ மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கலாக பெருமளவானோர் கலந்துகொண்டனர்.