மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

புனித மரியாள் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை

உலகின் மீட்புக்காக பூமியில் அவதரித்த ஜேசு பிரானின் யேசு கிறிஸ்துவினை மகிமைப்படுத்தும் கிறிஸ்மஸ் பண்டிகை இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஜேசு பிறப்பினையும் அவரின் அவதாரத்தினையும் வெளிப்படுத்தும் வகையில் நேற்று நள்ளிரவு கிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடாத்தப்பட்டன.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் ஜேசு பிறப்பு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேவாலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்த நிலையில் இருந்தபோதிலும் இன்றைய ஆராதனையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்று நள்;ளிரவு நடைபெற்ற இந்த கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனையில் ஜேசு பாலகனின் திருவுருவம் தொழுவத்தில் வைக்கப்பட்டதை தொடர்ந்து விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டதுடன் அவ்வாறான சம்பவம் இனியொருபோதும் நடைபெறாமல் இருக்கவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

ஆலயத்தின் பங்குத்தந்தை சி.வி.அன்னதாஸ் அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பக்தர்கள் என பெருமளவானோர் கலந்துக்கொண்டனர்.

இன்றைய கிறிஸ்தவ வழிபாட்டினையொட்டி பேராலயத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர்,பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.