மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினம்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15வது ஆண்டு நிறைவாகியுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கையினை உலுக்கிய பாரிய அனர்த்தங்களில் மிகப்பாரிய அனர்த்தமாக சுனாமி அனர்த்தம்  அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான அனர்த்தங்களில் இருந்து எதிர்காலத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் சகல அரச திணைக்களங்கள் ஊடாக தேசிய பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

தேசிய பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் இன்று காலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

சுனாமி அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று தேசிய பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சுனாமி அனர்த்தம் காரணமாக 1268பேர் உயிரிழந்திருந்தனர்.

இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக திணைக்கள தலைவர்கள்,உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.