தேசிய உற்பத்தி திறன் விருது வென்றது வாகரை பிரதேச சபை.


2018ம் வருடத்தில் சிறந்த அலுவலக முகாமைத்துவ நடவடிக்கை , அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை மக்களுக்கு வினைத்திறனாக ஆற்றியமைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது உள்ளூராட்சி சபைக்கான தேசிய உற்பத்தி திறன் விருதை கோறளைப்பற்று வடக்கு  வாகரை பிரதேச சபை வெற்றிகொண்டது.இன்று வியாழக்கிழமை (26.12) தேசிய உற்பத்தி திறன் அமைச்சின் செயலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இதற்கான விருதினை பெற்றுக்கொண்டார் வாகரை பிரதேச சபையின் தவிசாளர் சிவஞானம் கோணலிங்கம்.

வாகரை பிரதேச சபைக்கென ஒரு செயலாளர் இல்லாத நிலையில் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர்களின் அர்ப்பணிப்போடு கூடிய சேவை நடவடிக்கைகளும், தவிசாளரின் முயற்சி மற்றும் வழிகாட்டலுக்குமே இந்த வெற்றி கிட்டியிருக்கிறது.