பெரிய கல்லாற்றில் மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமியில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகள்வு இடம்பெற்றது


(புருசோத்)

இலங்கையில் ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட ஆழிப்பேரலையேற்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.

இதனைமுன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று காலை பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இவ்வாறு பெரிய கல்லாறு மத்த்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியகல்லாறு பகுதில் சுனாமியினால் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் நிகள்வு இடம்பெற்றது இவ் நிகள்வுகள் யாவும் மத்திய விளையாட்டு கழகத்தின் தலைவரும் பெரியிளாளர் த.விவேக்சந்தின் தலைமையில் இடம்பெற்றது 

இதன் போது சர்வார்த்த சித்தி வினாயகர் ஆலய வன்னக்கர் மூ.மன்மதராஜா மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீநடேசா டுனாஸ் காந்தக்குருக்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சுனாமியினால் உயிர் நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள், கழக உறப்பினர்கள் என பலரும் கலந்து கொட்டிருந்தனர்.

இதன் போது சுனாமியினால் உயிர் இழந்த உறவுகளுக்காக ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.