மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார விழாவும் இலக்கியவிழாவும்



மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நாடாத்திய கலாசார விழாவும் இலக்கியவிழாவும்
27.12.2019 வெள்ளிக்கிழமை பி. 2 மணியளவில் களுதாவனை கலாசார மண்டபத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் இடம் பெற்றது.

இவ் விழாவிற்கு சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதனும் மேலும் பல அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது தமிழ் தாய் வாழ்த்தினை தேனுகா கலைக்கழகத்தின் செயலாளர் ச.செல்வப்பிராகஷ் நிகழ்த்தி வைத்தார் , கலாசார கீதத்தை தேனுகா கலைகழகத்தினாலும் இசைக்கப்பட்டதுடன் வரவேற்புரையை உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் நிகழ்த்தினர்

இவ் விழாவின் தலைமை உரையை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் நிகழ்த்தி வைத்தார் வரவேற்ப்பு நடனம் கரகம் பரதம் வில்லுப்பாட்டு மற்று செம்பு நடனங்களும் இடம் பெற்றதுடன் விசேட உரையை கலாபூசணம் தேனூரான் நிகழ்த்தினார்.

இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள மூத்த இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மண்முனை தென் எருவில் பற்று கலாசார பேரவையால் நடாத்தடப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலைஞர்கள் கொளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்க விடயம்.