சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா கஞவாஞ்சிகுடியில்


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது மண்முனை தென் எருவில் பற்று மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று(27.12.2019) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின  விழாவிற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டார் அத்துடன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா யோகநாதனும் கௌரவ அதிதியாக  கலந்துகொண்டார் இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகள் இதன்போது பரிசு வழங்கி வைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வில் பங்கு பற்றிய மாற்றுத்திறனாளிகளும் பரிசு பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.