அறநெறிக்கல்வி ஒரு மனிதனை முழுமையாக்கும். ஆரையம்பதியில் சாணக்கியன்.




மட்டக்களப்பு ஆரையம்பதி கோவில்குளம் ஸ்ரீ சித்தி நாதர் நாகம்மாள் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வளங்கும் நிகழ்வு இன்று கோவில்குளம் பிள்ளையார் ஆலயத்தில்  ச.திவ்வியநாதன்(முன்னாள் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன   தலைவரும்  மண்முனைபற்று பிரதேச சம்மேளன பொருளாளர்) தலைமையில் இடம்பெற்றது .


இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டு அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கல்வி உபகரணங்கள் வழங்கி வைத்தார்.

 இதன் போது கருத்து தெரிவித்த
இரா.சாணக்கியன் மனித வாழ்விலே நாம் ஆலய வழிபாடு, இறை வணக்கம் , இறை செயற்பாடுகள் ஈடுபடுவது என்பது நம் வாழ்வில் உயர்வை தரக்கூடியது.

பிள்ளைகளை நல்வழி படுத்துகின்ற வகையில் அறநெறிக்கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது அறநெறிகல்வி மூலம் மனிதனை நல்ல பண்புகளை கொண்ட மனிதனாக மாற்ற முடியும் சிறைத்தண்டனை குட்பட்ட நபர் ஒருவரைக்கூட அறநெறிகல்வி சீர்படுத்தி சமூகத்தில் நல்ல மனிதனாக மாற்ற முடியும் எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டாயம்  அறநெறி  பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என இதன் போது தெரிவித்தார்