கல்முனை பிரதேச செயலகத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பெளத்தபிக்கு நீராவியடி விடயத்தில் எதிராக நின்ற போது ஏன் வாய்திறக்கவில்லை.





இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் தும்பங்கேணி இளைஞர் விவசாய அமைப்பு கிராமத்தின் வெள்ளிமலை விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணிக்கு சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன .


இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பல உதவித் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய கிராமத்திற்கு உள்ள வெள்ளிமலை விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் அணிக்கான சீருடை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியனினால் வழங்கிவைக்கப்பட்டது.


குறித்த நிகழ்வின் போது இரா. சாணக்கியன்  கருத்து தெரிவிக்கையில்


இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிகள் கல்வி,  சுகாதாரம்,  வாழ்வாதாரம்,  மற்றும் விளையாட்டு போன்றதுறைகளை முன்னேற்றுவது ,
அதற்க்கான உதவிகளை மக்களுக்கு வழங்கும் ஒரே நோக்குடன்  உருவாக்கப்பட்ட அமைப்பே சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு .


  அந்தவகையில் நகர பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டுக்குத் தேவையான சீருடை பாதணிகள் விளையாட்டு உபகரணங்கள் இலகுவில் கிடைக்கக் கூடிய வழி வகைகள் உள்ளன,  ஆனால் பின்தங்கிய பிரதேசங்களில் இவ்வாறான உதவி திட்டங்களை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை .


  அந்த வகையில் எமது அமைப்பின் ஊடாக இளைஞர்களை பலப்படுத்துவதற்க்கு தொடர்ந்து செயற்படுவோம்.


எமது கல்வியை வளர்க்க வேண்டும் எமது எதிர்காலம் கல்வியிலே  தங்கியுள்ளது கல்வி வளர்ச்சியின் ஊடாகத்தான் எமது எதிர்காலத்தை நாங்கள்  கட்டியெழுப்ப முடியும் .


தமிழ் மக்களின் எதிர்காலம் நலன் கருதி செயற்படும் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்தக் கட்சியின் ஊடாக போட்டியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் மட்டும்தான் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்கலாம்.


கல்முனை பிரதேச செயலக தரம் உயர்த்த கோரி தமிழருக்கு ஆதரவாக இருந்த பௌத்த பிக்கு முல்லைதீவு நீராவியடி  பிள்ளையார் ஆலய பகுதியில் பிக்குவின் உடல் தகனம்  செய்யப்பட்ட போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார்.


கல்முனை விவகாரத்தில் அவ் பிக்குவுடன் ஆதரவாக செயல்பட்ட தமிழ் பிரதிநிதிகள்  முல்லைதீவு விவகாரத்தில் எதிராக   அப்பிக்கு செயல்பட்ட போது எந்தவித கருத்தையும் சொல்லவில்லை,  எதிர்கவும் முடியவில்லை. 

கல்முனை விவகாரத்திலும் சரி நீராவிப் பிள்ளையார் ஆலய விவகாரத்திலும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே குரல் கொடுத்தது என்பதே உண்மை என தெரிவித்தார் .