போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாச்சார மற்றும் இலக்கிய விழா

 (எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச கலாச்சார விழாவும் இலக்கிய விழாவும் 2019 போரதீவுப்பற்று கலாச்சார மண்டபத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மா.உதயகுமார் பிரதம அதிதியாகவும் சிறப்பதிதிகளாக கோட்டக்கல்வி அதிகாரி ரீ.அருள்ராசா வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் ச.கணேசமூர்த்தி மற்றும் திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர்கலந்து கொண்டு சிறப்பித்துக்கொண்டனர்.
2019ம் ஆண்டிற்கான பிரதேச இலக்கிய விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் மேலும் கலை இலக்கிய துறையில் பலசாதனைகளை நிலைநாட்டிய பிரதேச மூத்த கலைஞர்களுக்கும் இளைய கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் பல கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பல கலைநிகழ்வுகளும்; இடம்பெற்றதுடன் வெள்ள அனத்ததின்போது வீடுகள்பாதிக்கப்பட்ட பதினாறு குடும்பங்களுக்கு முதற்கட்ட நிதியாக 10000.00 (பத்தாயிரம்) பெறுமதியான காசோலைகளும் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.