புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட யுவதிக்கு சுவிஸ் உதயம் அமைப்பு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொம்மாதுறை பகுதியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள யுவதியின் மருத்து சிகிச்சைக்காக சுவிஸ் உதயம் அமைப்பினால் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் குறித்த யுவதியின் சிகிச்சைக்காக நான்கு இலட்சம் ரூபாவினை சுவிஸ் உதயம் வழங்கியுள்ளது.
ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட கொம்மாதுறையில் மிகவும் வறிய நிலையில் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றின் இளம் பெண்ணுக்கு புற்று நோய் தாக்கியுள்ளது.

உயர்கல்வியை குறித்த பெண் கற்றுவரும் நிலையில் குறித்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதனால் குறித்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கவேண்டிய நிலையுள்ளது.

இந்த நிலையில் குறித்த யுவதிக்கு சிகச்சையளிப்பதற்கு சுமார் 10 இலட்சம் ரூபா தேவையாகவுள்ள நிலையில் அதற்குரிய பணத்தினை திரட்டுவதற்கு முடியாத நிலையில் சமூக சேவைகள் திணைக்களத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இதற்கான வேண்டுகோளை சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுத்திருந்தார்.

இதற்கமை சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம்,நிர்வாக சபை உறுப்பினர் உறுப்பினர் குமாரவேல் பாலா,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரை சந்தித்து குறித்த யுவதிக்கான சிகிச்சைக்கான பணத்தினை வழங்கிவைத்தனர்.