நீதி மன்றினுள் பதறிய வயோதிப தாய். - அதிர்ச்சியடைந்த நீதித் தரப்பு.



மட்டக்களப்பு மாவட்டத்தில்   நீதி மன்றம் ஒன்றில் வழக்குக்குக்கா சென்ற வயோதிப தாய் ஒருவரின் ஒருதொகை பணத்தை நீதி மன்ற வளாகத்திற்குள் வைத்தே நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்ற நிலையில் குறித்த வயோதிப தாய் கதறியழுத காட்சி  நீதி மன்ற நீதிபதி சட்டத்தரணிகள் உட்பட  அலுவலர்களை ஆதிர்ச்சியடையச்செய்துள்ளது.


பணக்கொடுக்கல் வாங்கல் பிணக்குக்காக நீதிமன்றம் சென்ற வயோதிப தாய்ஒருவருக்கு  ஒருதொகை பணத்தை தபால்நிலையத்தில் காசுக்கட்டளையாக செலுத்தி பற்றுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கும்படி நீதவான் கட்டளை பிறப்பித்திருக்கிறார்.


அதற்க்கமைய பணத்தைசெலுத்துவதற்க்கு இடம்தெரியாது எங்குபோவது ?என்னசெய்வது ? என செய்வதறியாது அங்குமிங்கும்  அலைந்த தாயை அவதானித்துக்கொண்டிருந்த நபர்  ஒருவர் தொலைபேசியில் " பச்சைக்கலர் சாறி கட்டின அம்மாவா?"  என கதைத்தவாறு நெருங்கி "அம்மா உங்கள்ட இருந்து லோயர் காச வாங்கி என்னை போய்  போஸ்ற் ஒபிஸில்  கட்டித்து வரசொன்னார் "  என நயவஞ்சகமாக ஏமாற்றி பணத்தை வாங்கி கொண்டு  சென்றிருக்கிறான்.

நீண்ட நேரமாகியும் பணத்தை வாங்கி சென்ற நபர் திரும்பி  வராத நிலையில் அந்த தாய் தனது சட்டத்தரணியிடம் சென்று பணம்கட்ட நீங்கள் அனுப்பிய தம்பி இன்னும் வரயில்லையே என்றிருக்கிறார்,  சட்டத்தரணி நான் யாரை அனுப்பியது ? என்ற கேள்வியுடன்   நடந்ததை விசாரித்திருக்கிறார் , 


அப்போதுதான் குறித்த வயோதிப தாய்க்கு நடந்திருப்பது என்ன உணர முடிந்திருக்கிறது ,  தனது பணம் பறிபோய்விட்டது என கதறியழுத பாதிக்கப்பட்ட தாய் நீதிமன்ற வளாகத்தையே ஒருசில நிமிடம் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.


பட்டப்பகலில் பாதுகாப்பு நிறைந்த நீதி மன்ற வளாகத்துக்குள் நடைபெற்ற திருட்டு கைவரிசை நீதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. 

   இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பாகவும் குறித்த நீதி மன்ற வளாகத்திற்குள் பல தடவைகள் இடம்பெற்றிருக்கின்றன,   இந் நிலையில்  நீதிபதி பாதிக்கப்பட்ட தாயை பொலிஸில் முறைப்பாடு செய்ய ஆலோசனை வழங்கியதோடு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸாரை பணித்துமுள்ளார்.