கிழக்கின் கல்வி வளர்ச்சியை தடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு -கூறுகின்றார் பிரசாந்தன்

கிழக்கின் கல்வி வளர்ச்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே தடையாக இருந்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் இன்று மட்டு. ஊடக அமையத்தில் ஊடகசந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார் இதன் போது கருத்து தெரிவித்த பூ.பிரசாந்தன்,

கிழக்குத் தமிழர்களின் கல்வி இருப்பில் கடந்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே மொத்தமாக கிழக்கின் கல்வி அமைப்பிற்கு தடையாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

கல்குடா கல்விவலயப் பணிப்பாளருக்கு 83 பாடசாலை அதிபர்கள் ஆதரவாக கையெப்பமிட்டு அனுப்பியுள்ளனர் அவர் ஒரு சிறந்த வலயக்கல்விப்பணிப்பாளர் என்று.தற்போது அவருக்கு இடமாற்றம் வழங்க கடந்த அரசியல் காலம் போல் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மக்களின் வாக்குகளைப்பெற்று சேவை செய்ய வேண்டியவர்கள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பாராளுமன்றம் சென்றால் பிள்ளையானைப்பற்றி பேசுவதுதான் வேலை மக்கள் வாக்களிப்பது இதற்காக இல்லை மட்டக்களப்பிற்கு வரும் நிதி ஒதுக்கீடுகளை வேண்டுமென்றே திருப்பிஅனுப்புவது அவர்களுடன் சேர்ந்து போகவில்லை என்றால் அரச அதிகாரிகளுக்கு இடமாற்றம்
பெற்றுப்கொடுப்பதும் பதவி உயர்வைத்தடுப்பதும், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் விமர்சிப்பதும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலத்தில் கிட்டத்தட்ட 128 ஆசிரியர் இடமாற்றம் செய்துவிட்டு 28 ஆசிரியர்களைத்தான் பதில் ஆசிரியர்களாக நியமிப்பது மீதி 100ற்கு எங்கு செல்வது அது எமது தலைவர் சந்திரகாந்தனால் கொண்வந்த கல்விவலயம் ஆகவே கிழக்கு மாகாண கல்விவலயத்தில் அக்கரை இல்லாமல் கல்வியையும் குழிதோண்டிப்புதைத்துவிட்டு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்வதற்காகத்தாக தங்களது கடிதத்தலைப்பில் தமிழ் தேசியம் பேசுகின்றவர அரசியல்வாதிகள் இனியாவது திருந்திக்கொள்ளவேண்டும் கடந்தகாலம் போன்று இந்த ஆட்சியில் துரோகம் செய்வதற்கு எமது கட்சி ஒரு போதும் இடம்கொடுக்காது. குறித்த இடமாற்றத்ததை உடனநடியாக நிறுத்தப்படவேண்டும் இதற்கு குழுக்கள் அமைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் உடனடியாக இந்த அரசியர் பழிவாங்களில் பழிவாங்கப்பட்ட அதிகாரிகளுக்கு நியாயமான தீர்வ பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் எதிர்வரும் வாரத்தில் நேரில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளோம் .

சுமந்திரன் அவர்கள் தன்னுடன் அனைத்துக்கட்சிகளும் ஒன்றினைந்து வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் அவர் தனது கட்சியில் ஒன்றாக சேர வேண்டும் என்று கேட்கின்றாறே தவிர அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என குறிப்பிடவில்லை. கிழக்கிற்கும் வடக்கிற்கும் நிலமை வேறு கிழக்கு மாகாணத்தில் நாம் அழைத்து விடுத்துள்ளோம் அனைவரும் எம்முடன் இணைந்து பயணியுங்கள் என்று.

உண்மையில் அவர் இதயசுத்தியுடன் இதைக் கூறியிருந்தால் இதை பரிசீலிக்கவேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்தகாலத்தில் வாக்குகளை மட்டும் மக்களிடம் வாக்குகளை பெற்று ஐக்கியதேசிய கட்சியை மாத்திரம் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் கட்சி என்பது மக்களுக்கு தெரியவந்து மக்கள் தெளிவடைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒதுக்கின்ற சூழலில் தங்களைப்பாதுகாக்க இவ்வாறான கோரிக்கையை விட்டுள்ளார் என்றால் வட கிழக்கு அனைத்து தமிழர்களையும் ஏமாற்றுகின்ற ஒருவிதமான யுத்தி எனலாம்.

அவரது கூட்டுக்குள்ளேயே வரவேற்பில்லை மேலதிகமானவற்றையும் சேர்த்து என்ன ஜனனாயகத்தை கொண்டுவரப்போகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நல்லாட்சியில் ஊடகவியலாளர் முதல் கொண்டு அரச  அதிகாரிகள் முதல் கொண்டு ஊடகவியலாளர்கள் வரை பழிவாங்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள்,முகநூல்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது. கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு வருவோம். இது குறித்து சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் உடன் பேசியுள்ளேன் அதேபோல் பிரதேச செயலாளருடனும் பேச உள்ளேன், இரு தினங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்
இதைவிட  கல்வி அதிகாரிகள் மீதும் அரசியல் பழிவாங்கள்கள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக தமிழ் மக்களுக்கு இன்று மிஞ்சியிருப்பது கல்வி மட்டுமே. தமிழர்கள் அறிவாயுதம் ஏந்த வேண்டும் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் கல்வியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழிதோண்டி புதைத்துள்ளது.