பெரியகல்லாறு பகுதியில், நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை


 

(புருசோத்)

மட்டகளப்பு மாவட்டத்தில் மழையிடன் கூடிய காலநிலை குறைவடைந்த நிலையில் மக்களின் சுகாதாரத்தை மேன்படுத்தும் வகையிலும் நூளம்பு பெருக்கத்தை கட்டுபத்தும் வகையிலும் இன்று மாபெரும் சிரமதான பணி ஒன்று பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வானது கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் தலைவர் பெரியிலாளர் த.விவேக்ச்சந்திரன் அவர்களின் தலைமயில் இடம்பெற்றது, இதன் போது  பிரதேச சுகாதார பரிசோதகர் வே.வேணிதரன் அவர்களும் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உளியர்களும், மற்றும் கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்களும் இந்த சிறமாதான பணியினை முன்னெடுத்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தது.                                  

இதன் போது வீடுகளில் தங்கி இருந்த கழிவுகள் மற்றும் வீதிகளின் நீர் தேங்கி நிற்க கூடிய கழிவுள் என அனைத்து கழிவுகளும் கிராமம் பூராகவும் அகற்றபட்டன, இவ்வாறான சிரமதான பணியினை ஏற்பாடு செய்து நடத்திய கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்திற்கும்  அதன் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மற்றும் சிரமதான பணிக்கு உதவியாக இருந்த மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபபையின் சிற் உலியர்களுக்கும் இதன் போது கிராமத்து மக்கள் நன்றியை பாரட்டுகளையிம் தெருவித்தனர் என்பதும் குறிப்பிட தக்க விடயமாகும்.