‘எங்களுக்கு சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாங்கள் பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழவேண்டும்’

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி மக்கள் மழை ஓயும் வரையில் தங்களை நிரந்தரமான இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் தாழ்நிலங்கள் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஓய்த மழையினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது இருப்பிடங்கள் திரும்பிய நிலையில் நேற்று காலை முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் மீண்டும் மக்கள் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மீண்டும் தமது வீடுகளுக்கு வந்த நிலையில் மீண்டும் பெய்துவரும் மழை காரணமாக நாவற்குடா கிழக்கு பகுதி மக்களின் இருப்பிடங்களுக்குள் மீண்டும் வெள்ள நீர் செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இடம்பெயர்ந்து மீண்டும் வீடு வந்து மீண்டும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளதாகவும் மழை ஓயும் வரையில் தங்களை நிரந்தரமான இடத்தில் தங்கவைக்குமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தாம் கடந்த 30 வருடமாக மழை காலங்களில் அகதி வாழ்க்கையையே எதிர்கொண்டுவருவதாகவும் தமது பகுதிக்கான வடிகான் வசதிகளை ஏற்படுத்தி தமது பிரச்சினையை தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தமது வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ள நிலையில் தம்மால் வீடுகளில் வசிக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.தமக்கு நிவாரணமும் தேவையில்லை சோறும் தேவையில்லை மழைகாலங்களில் எமது பிள்ளைகளுடன் நாங்கள் நிம்மதியாக வாழவே விரும்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.