ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் கறுப்பு பட்டியணிந்து அமைதியான முறையில் இன்று பகல் நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்ற ஊடகவியலாளர் முகமட் சஜி மீது தாக்குதல் நடாத்தப்பட்டதுன் கொழும்பில் உள்ள அரச ஊடகம் ஒன்றின் செய்தி ஆசிரியர் முகமட் இர்பானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

ஆதனைக்கண்டித்தே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் என்னும் தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாக்காதே தாக்காதே ஊடகவியலாளர்களை தாக்காதே,காத்தான்குடி ஊடகவியலாளர் முகமட் சஜி மீதான தாக்குதலை கண்டிக்கின்றோம், தாக்குதல்தாரிகளை கைதுசெய்யாமையை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது வாயில் கறுப்பு பட்டியணிந்து ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினை பாதுகாக்குமாறு கோரும் பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.