(சசி துறையூர் )
மத்திய மாகாணம் சார்பாக ஹற்றனில் நடை பெற்ற இலங்கை சமாதான நீதிவான்கள் மாநாட்டில் சமூகத்திற்காக கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சிறந்த சேவையாற்றிய சமாதான நீதிவான்களுக்கு அவர்களின் சமூக சேவையை பாராட்டி தேச சக்தி விருது வழங்கி கெளரவமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு கடந்த 02.11.2019 சனிக்கிழமை ஹற்றனில் நடைபெற்றது நிகழ்வில் வாலிபர் முன்னனி தலைவர் லோகிதராஜா தீபாகரன் அவர்களுக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவை பணிப்பாளர் தேசிய பணிபாளர் கலாநிதி பஹாத் மஜீட் , வடமாகாண பணிப்பாளர் மற்றும் கிழக்குமாகாண பணிப்பாளர் மத்திய மாகாண பணிப்பாளர்
மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்ட பணிப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்ட பணிப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
லோகிதராஜா தீபாகரன் புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் பேராதனை பல்கழைகழகத்தில் கலைமானி முதுமானி பட்டங்களை பெற்று
ஏறாவூர் நகர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிவதுடன்
இந்து கலாச்சார அமைச்சின் யோகா பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.
எமக்காக நாம் உதவிடுவோம் வாரீர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக சமூகசேவைகள் பல முன்னெடுத்து வருகிறார்.
மேலும்
கோல்டன் ஈகிள் விளையாட்டு கழக செயலாளராகவும் ,
இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளராகவும் ,
யோகா ஆரோக்கிய இளைஞர் கழக் செயலாளராகவும் உள்ளதோடு
குமாரத்தன் ஆலயம் ,
உதவும் கரங்கள் அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .


