தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் -மறத்தமிழர் கட்சி வேண்டுகோள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என மறத்தமிழர் கட்சி வேண்டுகோள்விடுத்துள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.

இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தமிழ் மக்களை ஏமாற்றிய வரலாறுகளே இருப்பதன் காரணமாக தமது கட்சியினால் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கமுடியாத நிலையிருப்பதாகவும் மறத்தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் நா.பத்மநாதன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் மகிந்த-கோத்தபாயவின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கான ஒரு தீர்வினை வழங்ககூடிய பலம் இருந்தபோதிலும் அதனை வழங்காமல் தமிழ் மக்களை ஏமாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று சஜித் பிரேமதாசவின் கட்சியின் ஆட்சிக்காலம் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வும் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டே வருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டினர்.

அதன் காரணமாக தமது கட்சியான மறத்தமிழர் கட்சியானது எந்த பிரதான கட்சி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் உறுதிமொழிகள் தொடர்பில் தம்மாள் திருப்திகொள்ளமுடியாத காரணத்தினால் தாங்கள் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்கமுடியாத நிலையுள்ளதாகவும் இங்கு தெரிவித்தனர்.

இதன்போது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ச.ராஜ்சுதன்,மாவட்ட இணைப்பாளர் ம.ஜெயக்கொடி ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.