சீ.மூ இராசமாணிக்கம் அவர்களின் சிரார்த்ததின நிகழ்வுகள் களுவாஞ்சிகுடியில்.



சீ.மூ இராசமாணிக்கம் அவர்களின் சிரார்த்ததின நிகழ்வுகள் களுவாஞ்சிகுடியில்.

1949ல் உதயமான இலங்கைத்  தமிழரசு கட்சியின் ஸ்தாபகர்  பெருந்தலைவர் தந்தை செல்வா அவர்களோடு கைகோர்த்து தமிழர் வாழ்வுரிமைப்போராட்டத்தை உத்வேகத்துடன் முன்னெடுத்த கிழக்குத்தலைமைகளில் முதன்மையானவரான சீ.மூ இராசமாணிக்கம்  அவர்களின் 45வது சிரார்த்த தின நிகழ்வு எதிர்வரும் 2019.10.07ந் திகதி   திங்கட்கிழமை சீ.மூ. இராசமாணிக்கம் ஞாபகார்த்த  மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் குறித்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் மத்தியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி (நேரம் 10.30) செலுத்தப்படுவதுடன்  நினைவுப்பேருரை நிகழ்வுகள் காலை 10.45 மணிமுதல் சீ.மூ. இராசமாணிக்கம் ஞாபகார்த்த  மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னால்  மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

1913.01.20 திகதி பிறந்த சீ.மூ இராசமாணிக்கம் என்ற ஆளுமை நிறைந்த மனிதர் தமிழரசு கட்சியின் தலைவராக 1961 தொடக்கம் 1964ம் ஆண்டுவரை செயற்பட்டவர்.

 1960 ஆண்டு முதல் 1970ம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரதிநியாக பத்துவருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், சுமார் முப்பது வருட காலத்துக்கும் மேலாக சமூக சேவகனாகவும் அரும் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.